
காரை இந்துக்கல்லூரி மைதான சுற்றுமதில் அமைத்தல்
மேற்படி பாடசாலையின் கிழக்கு, தெற்கு, மேற்கு பக்க மைதான சுற்றுமதில் அமைக்க,பாடசாலை பழைய மாணவர் சங்கம், பிரித்தானிய காரை நலன்புரிச்சங்கத்தை நாடியுள்ளது.
உலகெங்கிலும் உள்ள காரை இந்துக்கல்லூரியின் பழைய மாணவர்களிடமிருந்து நிதியை சேகரித்து, காரை இந்துக் கல்லூரியின் கிழக்கு, தெற்கு, மேற்கு பக்க சுற்று மதிலை கட்ட உதவுமாறு பிரித்தானிய காரை நலன்புரிச்சங்கத்தினை பாடசாலை சமூகம் கேட்டுக்கொண்டுள்ளது.
அவர்களின் கோரிக்கையை ஏற்ற பிரித்தானிய நலன்புரிச்சங்கம், சங்க நிதியில் இருந்து இலங்கை ரூபா இரண்டு மில்லியனை (இருபது இலட்சம் ரூபாவினை) ஒதுக்கி உள்ளது.
காரை இந்துக் கல்லூரி பாடசாலை சமூகத்தினால் மேற்படி செயல்திட்டத்திற்கான மொத்த செலவாக இலங்கை ரூபா 8.1 மில்லியன் ஆகும் என அறிக்கை கொடுத்துள்ளார்கள். இரண்டு மில்லியன் போக மிகுதி 6.1 மில்லியன் ரூபாவினை, பழைய மாணவர்களிடமும் , காரைநகர் மக்களிடமும் சேகரிப்பதென பிரித்தானிய காரைநலன்புரிச்சங்கம் முடிவு செய்துள்ளது.
மேற்படி திடத்திக்கான ஏக நிதி சேகரிப்பாளராக, பிரித்தானிய காரை நலன்புரிச்சங்கம் விளங்குகிறது. எனவே உலகின் எந்த மூலையில் இருந்தும், மேற்படி திட்டத்திற்கு பங்களிக்க விரும்புபவர்கள், எமது சங்கத்திடம் நிதியை வழங்கி பற்றுச்சீட்டை பெற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.


Organisator
Tharsan Rajendran
Organisator
England
Karai Welfare Soceity (UK)
Spendenbegünstigte