Main fundraiser photo

India-TN-Kaja Cyclone Relief Activities

Donation protected
கஜா எனும் பெரும்புயல் தஞ்சை, திருவாரூர், நாகை, புதுக்கோட்டை உள்ளிட்டக் கடலோர மாவட்டங்களில் பெரும் பாதிப்பினையும், அளப்பெரிய சேதத்தையும் ஏற்படுத்தி, அம்மாவட்டங்களையே நிலைகுலையச் செய்திருக்கிறது. சில ஆண்டுகளுக்கு முன்பாகக் கடலூரில் தானே புயல் ஏற்படுத்திய இழப்பை ஒட்டிய இழப்பாகவே கஜா புயலினால் ஏற்பட்ட அழிவுகள் இருக்கும் என மதிப்பீடுகள் தெரிவிக்கின்றன. நாம் நினைத்துப் பார்க்க முடியாத அளவுக்கு மிகப்பெரும் பேரழிவுகளை அம்மாவட்டங்கள் சந்தித்து நிற்கின்றன. மாவட்டங்கள் முழுவதும் ஏராளமான மரங்கள் சாய்ந்துவிட்டன. மின் கம்பங்கள், அலைபேசிக் கோபுரங்கள் என எதுவும் தப்பவில்லை. புயலின் கோரத்தாண்டவத்தில் வீடுகளும் இடிந்ததால் மக்கள் வாழ்விடமின்றி தவித்துக் கொண்டிருக்கின்றனர். வேதாரண்யம் பகுதிகளில் கடல்நீர் உட்புகுந்ததால், அந்நிலங்களில் இன்னும் பல ஆண்டுகளுக்கு விவசாயம் செய்ய முடியாத நிலை உருவாகியிருக்கிறது. ஆங்காங்கே உயிர்ச்சேதங்களும் ஏற்பட்டிருப்பதாக வரும் தகவல்கள் பெரும் மனவேதனையைத் தருகின்றன.இந்த மக்களுக்கு உதவ நன்கொடைகளை தயவுசெய்து கொடுங்கள்.

———
The Cyclone Gaja has caused tremendous damage to the coastal districts of Tanjore, Tiruvarur, Nagapattinam and Pudukkottai and damages the damaged areas. Estimates suggest that the calamity caused by the storm was the loss of a storm in Cuddalore, a few years ago. Moments are met with great disasters that we can not imagine. A large number of trees have leaned across the counties. None of the electric poles or the toilet towers escaped. In the storm of the storm, houses are ruined and people are living without shelter. The watershed in the area of ​​Vedaranyam has been inadmissible for many years in agriculture. The information that comes with spontaneous deaths is a major embarrassment.Please give your donations to help these peoples.

Organizer

Thinnaifoundation Ngo
Organizer
Glen Allen, VA

Your easy, powerful, and trusted home for help

  • Easy

    Donate quickly and easily.

  • Powerful

    Send help right to the people and causes you care about.

  • Trusted

    Your donation is protected by the  GoFundMe Giving Guarantee.